நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16 வயது மாணவியிடம் பாலியல் பலாத்காரம்: காவல்துறை அதிகாரிக்கு மேலும் ஒருநாள் தடுப்பு காவல் நீட்டிப்பு 

பாரிட்: 

படிவம் 4 மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சார்ஜென்ட் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரியின் தடுப்பு காவல் மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 376 வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக 42 வயதான காவல்துறை அதிகாரி ஜனவரி 28 அன்று கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி அஸ்லின் ஜெட்டி ஜைனால் அபிடின் புதன்கிழமை அனுமதியளித்தார்.

முன்னதாக, கருப்பு சட்டை அணிந்த காவல்துறை அதிகாரி ஒகாலை 8.50 மணிக்கு பாரிட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வந்தார்.

காலையில் தொடர்பு கொண்ட பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹமத் யூஸ்ரி ஹசான் பஸ்ரி, காவலரின் காவலை நீட்டிக்க இன்று தனது தரப்பு விண்ணப்பிக்கும் என்று கூறினார்.

திங்களன்று, முஹமத் யூஸ்ரி, ஞாயிற்றுக்கிழமை மத்தியப் பேராக் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் காவல்துறை அதிகாரி தடுத்து வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு ஜூலை, அக்டோபர் மாதங்களில் வெவ்வேறு சம்பவங்களில் சார்ஜென்ட் பதவியில் காவல்துறை அதிகாரியால் 16 வயது பெண் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறியதாக கடந்த புதன்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset