நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலைத் தைப்பூச உண்டியல் காணிக்கை: சனிக்கிழமை எண்ணப்படும்

கோலாலம்பூர்:

பத்துமலைத் திருத்தல தைப்பூச உண்டியல்  வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்படும்.  

எனவே பொதுமக்கள், பக்தப் பெருமக்கள், தொண்டர்கள் என அனைவரும் வருகை தந்து உண்டியல் பணத்தை எண்ணி, கணக்கிட்டு தரும்படி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானப் பொருளாளரும், அறங்காவலருமான டத்தோ பெ. அழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.  

மேலும் நடந்து முடிந்த பத்துமலை தைப்பூசத் திருவிழா மேற்குகை உண்டியல் பகுதியில் சேவையாற்றிய தொண்டர்களுக்கும், பத்துமலை அடிவார சுவாமி மண்டபம், ஸ்ரீ கணேசர் கோவில், ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ சிவன் கோவில், ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில், இராமாயணக்குகை என அனைத்து உண்டியல் பகுதியிலும் சேவையாற்றிய தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
 
அத்துடன் கடந்த காலங்களில் பத்துமலைத் திருத்தல தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பான சேவையை வழங்கிய தொண்டர்களுக்கும், சிறந்த பாதுகாப்பு வழங்கிய காவல்துறை மற்றும் ரேலா படையினருக்கும், முதலுதவி சேவைகள் புரிந்த  செயின்ட் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ், செஞ்சிலுவைச் சங்கம், தொண்டர் படையினர், தேவஸ்தானத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள், வாரிய உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டு தூதர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ அழகன் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset