செய்திகள் மலேசியா
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தலைமுடி தானம் செய்யும் இயக்கம்
கோலாலம்பூர்:
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு உதவும் வகையில் மாரான் சந்நிதானத்தில் தலை முடியை திரட்டுவதற்கான மையம் அமைக்கப்பட்டதாக பெர்துபோஹான் அனாக் வாத்தான் முகிபா எனும் அரசு சாரா அமைப்பின் தலைவர் டாக்டர் திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.
பத்துமலை ஆலய நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்த முகாமில் முருகனுக்கு தலைமுடியை காணிக்கையாக செலுத்தும் பலர் புற்று நோயாளிகளுக்கு உதவும் வகையில் தங்கள் தலை முடியை தானம் செய்தனர்.
மக்கள் சேவையே மகேசன் சேவை. சேகரிக்கப்படும் தலை முடிகள் ஒட்டு மொத்தமாக சிகிச்சை முறைக்காக சீனாவிற்கு அனுப்பப்படும்.
அங்கு செயற்கை (ஒட்டு) முடி தயார் செய்யப்பட்டு பிறகு மலேசியாவிற்கு அனுப்பப்படும்.
பின்னர் கோலாலம்பூர் பொது மருத்துவமனையிலும் இதர சிகிச்சை நிலையங்களிலும் கீமோ தெரபி சிகிச்சை பெற்றுவரும் புற்று நோயாளிகளுக்கு இவை இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றார் அவர்.
இதற்கிடையே அரசு சாரா அமைப்பு ஒன்று மேற்கொண்டுள்ள இத்தகைய பரிவுமிக்க திட்டத்திற்கு பக்க பலமாக விளங்கிய பத்துமலை ஆலய நிர்வாகத்திற்கும் அறங்காவலர் டத்தோ சிவகுமாருக்கும் பெர்துபோஹான் அனாக் வாத்தான் முகிபா அமைப்பினரின் சார்பில் டாக்டர் திருஞானசம்பந்தரும் டாக்டர் தேவி ஷர்மினியும் தங்களின் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 2:30 pm
“ரோன்95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
March 15, 2026, 1:52 pm
எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது
March 15, 2026, 1:48 pm
