நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர் விவகாரங்கள் தொடர்பில் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் இல்லாதது ஏமாற்றமே: கணபதி ராவ்

பெட்டாலிங்ஜெயா:

இந்தியர் விவகாரங்கள் தொடர்பில் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் இல்லாதது பெரும் ஏமாற்றமே என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் உரிமைக்காக தொடர்ந்து கேள்வி எழுப்புவதால்தான் எனக்கு பல பிரச்சினைகள்.

மித்ரா நடவடிக்கை குழுவில் நான் இடம் பெற்றேன். ஆனால், அதன் நடவடிக்கையில் எனக்கு உடன்பாடில்லை

ஒதுக்கப்பட்ட நிதியால் இந்திய சமுதாயம் முழுமையாக பயன் பெற்றதா என்பது என்னுடைய கேள்வி.

அந்த கேள்விக்கு பின் அக் குழுவில் இருந்து நீக்கப்பட்டேன்.

அதன் தமிழ்ப்பள்ளிகளிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, ஆலயங்களுக்கான நிதி, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் விவகாரம் குறித்து நான் கேள்வி எழுப்பி வருகிறேன்.

ஆனால் இந்த கேள்விகள் எதற்கும் முறையான பதில் கிடைப்பது இல்லை. இருந்தாலும் சமுதாயத்திற்காக கேள்வி எழுப்புவது எனது உரிமை.

யார் ஆட்சிக்கு வந்தாலும் நமது உரிமைகளை பெற அரசிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று ஸ்ரீ முருகன் நிலைய நிகழ்வில் கலந்து கொண்ட பின் கணபதிராவ் செய்தியாளர்களிடம் கூறினார்.

அரசியலில் கட்சி கொடிகள் மட்டும் தான்  வேறு. சிந்தனை எல்லாம் ஒன்றுதான். ஆகவே இந்திய சமுதாயம் கல்வியில் வழியே இந்த நாட்டில் சாதிக்க வேண்டும்.

அதற்கு ஸ்ரீ முருகன் நிலையம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் சமுதாய மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று கணபதிராவ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset