நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓராண்டுக்கும் மேலாக மிரட்டிப் பணம் பறிக்கும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை வேண்டும்: சாந்தி ராஜ்

கோலாலம்பூர்:

ஓராண்டுக்கும் மேலாக மிரட்டி பணம் பறித்து வரும் நபருக்கு எதிராக போலீசும் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையமும் உரிய நடவடிக்கை வேண்டும்.

பிரபல வர்த்தகர் சாந்தி ராஜ் பார் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

என்னையும் எனது கணவரையும் அச்சுறுத்தும் ஒரு நபருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எங்களை மிரட்டுவதாக நம்பப்படும் அந்த நபர் இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி என்று அவர் கூறினர்.

சம்பந்தப்பட்ட நபர் தன்னைப் பற்றி டிக்டோக்கில் தவறான, அவதூறான அறிக்கைகளைப் பரப்பியதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த விவகாரம் குறுத்து போலீஸ், தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையமும்  ஆகியவற்றில் பலமுறை புகார் செய்ததாக சாந்தி  கூறினார்.

இது அனைத்தும் கடந்த 2017 இல் கணவர், எம். மகாவிக்னராஜ் இறந்த பிறகு தொடங்கியது.

என் கணவரின் நண்பர் அவரது மரணம் சாதாரண காரணங்களால் இல்லை என்று தெரிவித்தார்.

அப்போது அவருடன் ஒரு போலீஸ் அதிகாரி இருந்தார். அவர் எனக்கு தெரிவிக்கப்பட்ட அனைத்தையும் ஒப்புக் கொண்டார்.

மகாவிக்னராஜ் மரணத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை என் வாழ்வில் ஒரு கரும்புள்ளி விடாதபடி மாற்ற வேண்டும் என்று அந்த நல்ல நண்பர் என்னிடம் தெரிவித்தார்.

மகாவிக்னராஜின் இறுதி ஊர்வலம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, 

இருவரும் மீண்டும் தன்னிடம் வந்து பிரேதப் பரிசோதனை அறிக்கையை மாற்றிவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு  300,000 ரிங்கிட் கொடுக்கச் சொன்னதாகவும் அவர் கூறினார்.

அறிக்கையை மாற்ற வேண்டாம் என அவர்களைத் தடுத்தாலும், அவர்கள் என்னைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்துவோம் என்று மிரட்டத் தொடங்கினர்.

2017 இல் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் இருப்பதால் எதையும் செய்ய வேண்டும் என்று நான் மீண்டும் அவர்களிடம் சொன்னேன்.

அப்போது தான் அவர்களின் மோசடி, மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கை தொடங்கியது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset