நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓய்வூதிய திட்டம் ரத்து; முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சராணி முஹம்மத் 

ஈப்போ: 

பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தாம் கருத்து கூற விரும்பவில்லை என்று பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோ சராணி முஹம்மத் கூறினார். 

அண்மைய காலமான நாட்டில் பேசுப்பொருளாக இந்த ஓய்வூதிய திட்டம் மாறியுள்ளதை தாம் அறிவதாக கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக மாநில அரசாங்கம் எந்தவொரு நிலைப்பாட்டினையும் எடுக்கவில்லை. தாம் முறையாக ஆராய்ந்த பிறகே அது தொடர்பாக கருத்து தெரிவிப்பேன் என்று செய்தியாளர்களிடம் டத்தோ சராணி முஹம்மத் குறிப்பிட்டார். 

பேராக் மாநிலத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தற்போதைக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு முறையான நிரந்தர பணியமர்த்தும் நடவடிக்கைகள் உள்ளதாக அவர் சொன்னார். 

முன்னதாக, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பொதுச்சேவை துறையில் புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்று அரசாங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset