நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்

புத்ராஜெயா:

அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல், நாட்டின் பொதுச் சேவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு, 13 சதவீதத்திற்கும் கூடுதலான ஊதிய உயர்வை அரசு ஊழியர்கள் அனுபவிக்க உள்ளனர்.

இதற்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு 13 சதவீதமே அதிக சம்பள உயர்வு வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அதை விட கூடுதலாக வழங்கப்படும்.

அதே வேளையில் அரசாங்கம் அதனை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்யும் என்று பிரதமர் கூறினார்.

அடுத்த ஆண்டில் அரசு அதை அமல்படுத்த தொடங்கும் போது, ​​​​அதற்கான மொத்த தொகை 10 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக இருக்கும்.

பெரிய தொகையாக இருந்தாலும் அது அரசு ஊழியர்களுக்கு பயனையளிக்கும்.

புத்ராஜெயா அனைத்தலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற  2024 தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் இதனை அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset