நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் அரஃபாட் வீட்டிற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வருகை 

ஈப்போ: 

உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முஹம்மத் அரஃபாட் வாரிசை வீட்டிற்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகை புரிந்தார். 

முஹம்மத் அரஃபாட்டின் தந்தை நேற்று ஃபத்திமா மருத்துவமனையில் காலமானதைத் தொடர்ந்து ஆறுதல் கூறுவதற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உலு கிந்தாவிற்கு வருகை மேற்கொண்டு அரஃபாட் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். 

சுமார் 10 நிமிடங்கள் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கு நேரத்தைச் செலவிட்டார். மேலும், பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் வருகை தங்கள் குடும்பத்திற்குப் பெரும் ஆறுதலாக அமைந்ததாக முஹம்மத் அரஃபாட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

உயர் ரத்த அழுதம், நுரையீரல் பாதிப்பினால் ஈப்போ ஃபத்திமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முஹம்மத் அரஃபாட் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 76 ஆகும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset