நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய மிருகக்காட்சி சாலையில் பாண்டா கரடிகள் தொடர்ந்து தங்க மலேசியா விரும்புகிறது: பிரதமர் 

உலு லங்காட்:

தேசிய மிருகக்காட்சி சாலையில் பாண்டா கரடிகள் தொடர்ந்து தங்க மலேசியா விரும்புகிறது.

இது குறித்து சீன அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தேசிய மிருகக்காட்சிசாலையின் 60ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றியதாவது,

இந்த ஆண்டு காலாவதியாகும்  பாண்டா கரடிகள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நீட்டிக்க முடியுமா என்பது குறித்து விவாதிக்க சீன அரசாங்கத்தை மலேசியா தொடர்பு கொள்ளும்.

பல ஆண்டுகளாக இரு நாடுகளும் வலுவான,  நீடித்த இராஜதந்திர உறவுகளை கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில்  சீன அரசாங்கம் இந்த முன்மொழிவுக்கு உரிய பரிசீலனையை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாண்டாக்கள் மீண்டும் திரும்ப வரவுள்ளன. 

மலேசியாவில் பாண்டாக்கள் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்க முடியுமா என்று சில வழிமுறைகளை பார்க்க சீன அரசாங்கத்திடமும் அதிபர் ஜி ஜின்பிங்கிடம் எடுத்துச் செல்வேன்.

எங்கள் சிறந்த உறவுகளை அறிந்து, அவர்கள் எங்கள் முன்மொழிவுக்கு தகுந்த பரிசீலனை, ஆதரவை வழங்குவார்கள். இதில்  நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று பிரதமர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset