நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல்வாதிகள் ஒரே ஓர் ஓய்வூதியத்தை எடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது: பிரதமர்

உலு லங்காட்:

அரசியல்வாதிகள் ஒரே ஒரு ஓய்வூதியத்தை  எடுக்க வேண்டியதார்மீக பொறுப்பு உள்ளது என்றுபிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகள், ஒரே ஓர் ஓய்வூதியத் திட்டத்தை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் தார்மீகப் பொறுப்புடன் அவர்கள் நடந்து வேண்டும்.

அமைச்சர்கள், மந்திரி புசார்  அல்லது அரசியல் நியமனம் பெற்றவர்களின் சம்பளம் பெறுபவர்கள் மூன்று முதல் நான்கு ஓய்வூதியங்களை பெறுகிறார்கள். 

இந்த சூழ்நிலையைப் பார்க்கும்போது, ​​மற்ற ஓய்வூதியங்களை நிராகரித்து, ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்கள் தார்மீக பொறுப்புடன் இருக்க வேண்டும். 

ஆனால் நான் இந்த முடிவை அவர்களிடமே விட்டுவிடுகிறேன்.

தேசிய மிருகக்காட்சி சாலையின் 60ஆவது வைர விழா கொண்டாட்ட விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போது டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.

தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தைப் பெறத் தகுதியுள்ள அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் உத்தேச புதிய பொதுச் சேவை ஊதிய முறையால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset