நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய இளைஞர்களுக்கு  4.5 மில்லியன் மதிப்பிலான   இலவச பயிற்சித் திட்டங்கள்: ஸ்டீவன் சிம்

பத்துமலை:

இந்திய இளைஞர்களுக்கு  4.5 மில்லியன் மதிப்பிலான  பயிற்சித் திட்டங்கள் இலவசமாக வழங்கப்படும்.

பத்துமலையில் சிறப்புரையாற்றிய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை அறிவித்தார்.

பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு மனிதவள அமைச்சின் சிறப்பு கூடாரம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் ஓய்வெடுக்கும் நோக்கில் இந்த கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் இலாகாக்களின் முகப்பிடங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அவ்விலாகாக்களின் உள்ள திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.

குறிப்பாக 4.5 மில்லியன் மதிப்பிலான பயிற்சித் திட்டங்கள் பத்துமலைக்கு வந்த இந்திய இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

ஆகவே இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்டீவன் சிம் கூறினார்.

நான் ஒரு சீனராக இருந்தாலும் அனைத்து இன மக்களும் எனக்கு முக்கியம்.

அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்று அவர் கூறினார்.

- பார்த்தின் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset