நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு  மத்திய அரசின் தொடர் ஆதரவு வேண்டும்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு மத்திய அரசின் தொடர் ஆதரவு வேண்டும்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா இக்கோரிக்கையை முன்வைத்தார்.

பத்துமலையில் தைப்பூச விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய டான்ஸ்ரீ நடராஜா,  பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

கடந்த காலங்களில் மத்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப் பெற்ற நிதிகள் அனைத்தும் வங்கியில் பாதுகாப்பாக உள்ளது.

May be an image of one or more people, crowd, temple and text

இந்நிதியை கொண்டு மின் படிக்கட்டு, 3 ஆயிரம் பேர் அமரக்கூடிய பல்நோக்கு மண்டபம் ஆகியவற்றை கட்டுவதற்கான திட்டங்களை தேவஸ்தானம் மேற்கொள்ளவுள்ளது.

தேவஸ்தானத்தின் இந்த திட்டங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசு முழு ஆதரவை வழங்க வேண்டும்.

குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் நிதி இந்த மேம்பாட்டு திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இங்கு வந்துள்ள அமைச்சர்கள் தேவஸ்தானத்தின் இந்த கோரிக்கையை பிரதமரின் பார்வைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

- பார்த்தின் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset