நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் மின் படிக்கட்டு திட்டம் அவசியமானது: டத்தோஸ்ரீ சரவணன்

பத்துமலை:

பத்துமலையில் மின் படிக்கட்டு திட்டம் அவசியமானது என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவராக டான்ஸ்ரீ நடராஜா பொறுப்பேற்றதிலிருந்து பத்துமலையில் பல அபிவிருத்தி பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வந்துள்ளார்.

உலகமே பத்துமலை திரும்பிப் பார்க்கும் வகையில் முருகன் சிலையை கட்டி அவர் வரலாற்றில் இடம் பிடித்தார்.

தற்போது பத்துமலையின் மேல் குகைக்கு செல்ல மின் படிக்கட்டு திட்டத்தை மேற்கொள்ள தேவஸ்தானம் திட்டமிட்டு உள்ள வருகிறது.

இதற்கான அடிப்படை பணிகளை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனுமதிக்காக தேவஸ்தானம் காத்துக் கொண்டிருக்கிறது.

பத்துமலைக்கு வருவதைவிட  மேற்குகைக்கு சென்று முருகப் பெருமானை வழிபடுவதுதான்  சிறப்பு.

ஆனால் வயதானவர்கள், உடற்பேறு குறைந்தவர்கள் உட்பட பலர் மேல் குகைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 

தற்போது தேவஸ்தானம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி அவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.

ஆகவே மாநில அரசாங்கம், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் தேவஸ்தானத்தின் இந்த முயற்சிக்கு உரிய அனுமதியை வழங்கும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்தின் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset