நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ புனித லூர்து மாதா தேவாலயத்தில் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாட்டம்

ஈப்போ:

ஈப்போவில் உள்ள புனித லூர்து மாத ஆலயத்தில்  பொங்கல் திருவிழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

பொங்கல் திருநாளை ஒவ்வோர் ஆண்டும் இந்த  தேவாலயத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்கப்பட்டதுடன், கலை கலாச்சார நடனங்கள், பொங்கல் போட்டி ,  உறியடித்தல், பெரியவர்களுக்கும்,  சிறியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள், சிலம்பம் ஆட்டம், தனித்து வாழும் தாய்மார்களுக்கு நடனப் போட்டி , பலூன் ஊதி உடைத்தல்  கயிறு இழுத்தல் உட்பட பல போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த தேவாலயத்தில் கடந்த 31 ஆண்டு காலமாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது என்று தேவாலயத்தின் தமிழ் கலாச்சார குழுத் தலைவர் கிறிஸ்தோபர் கூறினார். 

இங்கு இந்த விழா இனம் பேதம் இன்றி நடத்தப்பபடுவதாகவும் , உழவர் திருநாளாம் பொங்கல் விழா இங்கு சிறப்புடன் நடைபெற பேராதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்

இந்த பொங்கல் விழாவில் அனைத்து சமயத் தலைவரும் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேவாலத்தின் பங்கு தந்தை ரோபட் டேனியல் அவர்களின் ஆசியுரையுடன் நிகழ்வு் தொடங்கப்பட்டது.

இதில் நாட்டின் நாடறிந்ந எழுத்தாளர் அன்னக்கிளி ராசையா பொங்கல் திருநாள் குறித்து சிறப்புரையாற்றினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset