நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி போலீசார் மோசடியில் சிக்கிய இல்லத்தரசி: 1.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்தார்

சிரம்பான்: 

போலி போலீசார் மோசடியில் சிக்கிய இல்லத்தரசி 1.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளார்.

இந்த சம்பவம் சிரம்பானில் நடந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் முஹம்மத் ஹத்தா கூறினார்.

சம்பந்தப்பட்ட இல்லத்தரசிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

போலீஸ் அதிகாரி என தம்மை அறிமுகம் செய்துகொண்ட ஆடவர் அப் பெண்ணை மிரட்டியுள்ளார்.

குற்ற நடவடிக்கைகளுக்கு அப் பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அந்த ஆடவர் மிரட்டியுள்ளார்.

இந்த விவகாரத்திற்கு தீர்வு காண பணம் செலுத்த வேண்டும் என அந்த ஆடவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் வங்கி கணக்கை திறந்த போது கணக்கில் இருந்த 1,491,832.82 ரிங்கிட் மொத்த பணமும் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் போலீஸ் புகார் செய்தார்.

ஆகவே பொதுமக்கள் இந்த விவகாரத்தில் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். போலீசார் என்று குறிக்கொண்டு ஏமாற்றும் ஒரு கும்பல் திரிவதை பொதுமக்கள் கவனித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset