நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் பிரதமரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்: எம்ஏசிசி

புத்ராஜெயா:

அரசாங்க வாகன கொள்முதல் தொடர்பிலான விசாரணைக்கு உதவ முன்னாள் நிதியமைச்சரும் டான்ஸ்ரீ பட்டம் கொண்ட வர்த்தகரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்.

தேவைப்பட்டால் முன்னாள் பிரதமரும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

4.5 பில்லியன் மதிப்பிலான அரசாங்க வாகன கொள்முதல், நிர்வாகம் தொடர்பிலான விசாரணைகளை எம்ஏசிசி விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

அரசாங்கத்தின் வாகனங்களை நிர்வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்திற்கு ஏன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

அந்தத் திட்டத்தை வேறு நிறுவனத்துக்குக் கொடுக்கும் எண்ணம் ஏன் ரத்து செய்யப்பட்டது ஆகிய இரண்டு விஷயங்களில் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த விசாரணைக்கு உதவும் நோக்கில் முன்னாள் நிதியமைச்சரும் டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட வர்த்தகரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்.

தேவைப்பட்டால் முன்னாள் பிரதமரும் இந்த விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கோடி காட்டினார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset