நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

40% லோரி ஓட்டுநர்களை ஈர்த்துள்ள ECRL திட்டம்: கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்படும் ஓட்டுநர் பற்றக்குறை

கோலாலம்பூர்:

ஈசிஆர்எல் திட்டம் கிட்டத்தட்ட 40 சதவீத லோரி ஓட்டுநர்களை ஈர்த்து வருகிறது. இதனால் கிள்ளான் பள்ளத்தாக்கில் லோரி ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று மலேசிய லோரி ஓட்டுநர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தான் பூன் ஹிங் கூறினார்.

ஈசிஆர்எல் என்பது கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு திட்டமாகும்.

இத்திட்டத்தின் கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தால் ஈர்க்கும் லோரி ஓட்டுநர்கள் தற்போது அங்கு வேலைக்கு செல்கின்றனர்.

சிறந்த ஊதியம், நிலையான மணி நேரம், அமலாக்க முகமைகளைக் கையாள்வதில் குறைவான சிரமம் ஆகியவற்றை காரணம் காட்டி அவர்கள் அங்கு வேலைக்கு செல்கின்றனர்.

இதனால் கிள்ளான் பள்ளதாக்கில் லோரி ஓட்டுநர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இது, அப்பகுதியில் உள்ள பல கட்டுமானத் திட்டங்களை பாதிக்கிறது. தற்போது 40 சதவீத லோரி ஓட்டுநர்களை நாங்கள் இழந்து விட்டோம்.

இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset