நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சனுசிக்கு எதிரான அமிருடினின் அவதூறு வழக்கு: ஜூலை மாதம் விசாரணை

ஷா ஆலம்: 

கெடா மாநில மந்திரி பெசார் சனுசி நோர் மீதான சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியின் வழக்கை விசாரிக்க ஜூலை 22, 23-ஆம் தேதிகளை உயர் நீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது. 

வின்சென்ட் டானுடன் 600 ஏக்கர் நிலத்தைப் 10 பில்லியன் மதிப்புள்ள சிலாங்கூர் மாநில நிலத்தை இலவசமாக பெர்ஜெயா லேண்ட் பிஎச்டிக்கு மாற்றுவதற்காக, வின்சென்ட் டானுடன் கூட்டுச் செய்து தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததாகச் சானுசி கூறியதையடுத்து கடந்த ஆண்டு அமிருடின் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

இதன் விளைவாக சிலாங்கூர் அரசாங்கத்திற்கு 180 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாக சனுசி மேலும் கூறினார்.

அமிருடின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹைஜான் ஓமார், நீதித்துறை ஆணையர் ரோஜி பைனோன் முன் மற்றொரு வழக்கை  ஜூலை 2 ஆம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset