நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்கள் உடல் ஆரோக்கியத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்: குலசேகரன் 

ஈப்போ:

மனம் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உன்னதம் கொள்வது போல் ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியமும் இன்றியமையாதது.

உடல் ஆரோக்கியமாக இருந்தால் நம் மனமும் வாழ்வும் நனிசிறந்து விளங்கும் என்றும் சட்டத்துறை துணை அமைச்சரும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.குலசேகரன் தெரிவித்தார்.

இந்தியர்கள் உடல் ஆரோக்கியத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் உணவு பழக்க வழக்கங்களில்  நன்முறையை கையாள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் உடற்பயிற்சி செய்வதில் நாம் முனைப்பு காட்ட வேண்டும்.

புந்தோங்கில் சஹாபாட் சிந்தா அலாம் கிந்தா என்னும் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் மற்றும் சுகாதார கருத்தரங்கில் கலந்து சிறப்பிக்கையில் அவர் இதனை நினவுறுத்தினார்.

மேலும், நல்ல உணவு முறையும் நிறைவான உடற்பயிற்சியும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு வளமிக்க வாழ்விற்கு வித்திடும்.

ஆனால்,உடற்பயிற்சி  செய்வதில் பிற இனங்களோடு ஒப்பிடுகையில் நாம் தொடர்ந்து பின் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

இன்றைய நிலையில் நீரிழிவு நோய் நம்மை தாக்கும் பெரும் நோய். இதிலிருந்து விடுப்பட சிறந்த வாழ்வில் முறையும் உண்டு. 

உணவு முறையில் அதனை நாம் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் விவரித்த குலசேகரன் ஒருநாளைக்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதுமானது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset