நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து சமய வளர்ச்சிக்கு பிரதமரின் ஆதரவு  தொடர்ந்து கிடைக்கும்: தங்க கணேசன்

ஈப்போ:

இந்து சமய வளர்ச்சிக்கு நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்று இந்து சங்க தேசியத் தலைவர் தங்க கணேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நாட்டில் பல்வேறு சவால்களை  இந்து சங்கம் எதிர்நோக்கி வருகிறது. இதனை சமாளித்து பல காரியங்களை செய்து வருகிறது.

இந்து சங்கம் அதன் நடவடிக்கையை மேற்கொள்ள நிதி உதவி கோரிக்கையை  டத்தோஸ்ரீ அன்வாரிடம் முன் வைக்கப்படும் என்றார்.

இன்று ஈப்போவில் உள்ள பேரா மாநில இந்து சங்க கட்டடத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில்  கலந்துக்கொண்ட டத்தோஸ்ரீ அன்வாரின் தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பு  அதிகாரியான ஆர். சுரேஷ்குமாரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றார்.

பல இன சமயத்தவர்கள் வாழும் இந்த நாட்டில் சமுக ஒற்றுமை அவசியம்.

அதன் அடிப்படையில் டத்தோஸ்ரீ அன்வார் தமது சேவையை மேற்கொண்டு வருகிறார்.

அவரின் சேவையில் இந்து சங்கத் நம்பிக்கை கொண்டுள்ளது. அவரின் நடவடிக்கை சமுக ஒற்றுமை வலுப்படுத்தும் என்று தங்க கணேசன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட ஆர். சுரேஷ்குமார், பேரா மாநில  இந்து சங்கத்திற்கு டத்தோஸ்ரீ அன்வார் வழங்கிய 25 ஆயிரம் ரிங்கிட்டுக்கான மாதிரி காசோலையை மாநில இந்து சங்க தலைவர் பெ. சுந்தரசேகரன் ஒப்படைத்தார்.

இதில் பேசிய ஆர். சுரேஷ்குமார், டத்தோஸ்ரீ அன்வார் இன , மதம் வேறுபாடின்றி உதவிகள் செய்து வருகிறார். 

இந்துக்களின்  தேவைகளை  அறிந்து தொடர்ந்து உதவிகள் செய்து வருவதை எடுத்துரைத்தார்.

எதிர்வரும் 25 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தைப்பூச விழா நடைபெற உள்ளது. 

இந்த ஆண்டு  ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் தைப்பூச  விழாவில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு டத்தோஸ்ரீ அன்வாரின் பேராதரவுடன் அன்னதானம் வழங்கப்படும் என்ற தகவலையும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset