நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் சேவைகளும் சாதனைகளும் மஇகாவால் என்றும் நினைவுகூரப்படும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர் -
மஇகாவின் அரசியல் பயணத்திலும், கட்சியின் மகளிர் பிரிவிலும் நீண்ட காலமாக தீவிர ஈடுபாடு காட்டி சேவையாற்றி வந்த டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் தனது 100 வயதில் முதுமை காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் துக்கமடைந்தேன்.

கடந்த காலங்களில் அவருடன் பல தருணங்களில் இணைந்து மஇகாவில் பணியாற்றியவன் என்ற முறையில் அவர் மீதான மரியாதைக்குரிய இனிய நினைவுகளை நான் என்றும் மறக்க மாட்டேன்.

அன்னாரின் பிரிவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும் அவரின் பேரனும் துணையமைச்சருமான டத்தோ ஆர்.ரமணனுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் மஇகா மகளிர் பிரிவில் மட்டும் தீவிரமாக ஈடுபட்டவரல்ல. பல முனைகளில் பொது வாழ்வில் சாதனைப் பெண்மணியாக திகழ்ந்தவர். 

இந்திய சமுதாயத்தில் மட்டுமின்றி மலேசிய மகளிர் சமூகத்திலும் அவர் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

1950-ஆம் ஆண்டுகளில் இந்தியப் பெண்களும் ஏன் மலேசியப் பெண்மணிகள் கூட பொதுவாழ்வில் ஈடுபடத் தயக்கம் காட்டிய காலகட்டத்திலேயே தீவிர அரசியலில் ஈடுபட்டவர் அவர்.

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் சேவைகளும் சாதனைகளும் மஇகாவால் என்றும் நினைவுகூரப்படும். 

அரசாங்கமும் அவரின் கடந்த கால சேவைகளைப் பாராட்டும் வகையில், அவரை எதிர்கால மலேசிய சமுதாயம் நினைவு கூரும் வகையில் அவருக்கு பொருத்தமான கௌரவத்தை வழங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்த வேளையில் முன்வைக்க விரும்புகிறேன்.

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset