நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசாங்கத்தின் ஒற்றுமை கொள்கையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்: அமைச்சர் கோபிந்த் சிங்

டாமான்சாரா:

மடானி அரசாங்கத்தின் ஒற்றுமை கொள்கையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று இலக்கயவியல்  அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.

தைப்பொங்கல் தமிழர் திருநாளை  முன்னிட்டு டாமான்சாரா டாமாய் இந்தியர் சமூக சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் டிஜிட்டல்  அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ சிறப்பு வருகை புரிந்து விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

தைப்பொங்கலை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுரேஸ் சிங், கவுன்சிலர் சுரேஸ், ஸ்ரீ டாமன்சாரா போலீஸ் தலைவர் ஏஎஸ்பி நஸிர் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

மலாய் பெண்கள் உட்பட 30 மகளிர்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.

 கோலாட்டம், சிலம்பாட்டம் , மயிலாட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றன.

டாமான்சாரா டாமாய் இந்தியர் சமூக சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மித்ராவிடம் இருந்து நிதியை பெற்று  இந்தியர்கள் வியாபாரம் செய்யும் வகையில் ஏழு கடைகள் இந்த பொங்கல் விழாவில் அமைக்கப்பட்டதை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பாராட்டினார்.

டாமான்சாரா நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார் என்று ரமேஷ் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset