நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் நிலை திவேட் கல்வியை பயில இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு: ஜாஹிட்

ஷாஆலம்:

நாட்டில் உயர் நிலை திவேட் கல்வியை பயில இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி இதனை அறிவித்தார்.

கல்வியின் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். அதே வேளையில் இந்திய சமூகத்தில் உள்ள சமூகப் பிரச்சினைகளை சமாளிக்க உதவுவதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் இந்திய இளைஞர்கள் உயர் தொழில்நுட்ப தொழில்நுட்பம், தொழிற்கல்வி, பயிற்சியில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

திவேட் வாரியத்தின் தலைவர் என்ற முறையில் இந்த அறிவிப்பை செய்கிறேன் என்று ஷாஆலமில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறினார்.

இந்த பொங்கல் விழாவில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், துணைப் பிரதமரின் இந்தியர் பிரிவு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசாங்கம் நகர்ப்புற வறுமை ஒழிக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்துகிறது.

வறுமை மட்டும் இல்லாமல், கல்வியின் மூலம் பொருளாதார நிலையை மறுகட்டமைக்க ஒரு செயல்முறையைப் பயன்படுத்த வேண்டும்.

இதில் மலாய், பூமிபுத்ரா சமூகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த நாட்டில் அனைத்து இனங்களுக்கும் சேவை செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும்.

சமுதாய மேம்பாட்டிற்கு கல்வியே சிறந்த வழி என்று ஜாஹிட் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset