நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்திற்கு உதவ மித்ரா, தெக்குன் மட்டும் அல்ல: பிரதமர்

கிள்ளான்:

இந்திய சமுதாயத்திற்கு உதவ மித்ரா, தெக்குன் மட்டும் தான் என்று நினைத்தால் அது தவறு என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டில் உள்ள இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான மித்ராவின் வாயிலாக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

தெக்குன் வாயிலாக 30 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகிறது.

இதை தவிர்த்து பள்ளிகளின் சீரமைப்பு பணிகள், தீவிர வறுமை ஒழிப்பு என பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆகையால் இந்திய சமுதாயத்திற்கு இது மட்டும் தான், இதுபோன்ற திட்டங்களை தவிர வேறு ஏதும் இல்லை என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

காரணம் நிதியமைச்சு, மனிதவள அமைச்சு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு உட்பட அனைத்து அமைச்சுகளின் வாயிலாக இந்திய சமுதாயத்திற்கு உதவும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இம்மக்கள்  எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் இன்னும்  முழுமையாக தீர்வு காணவில்லை. இதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால் வறுமை, கல்வி,  சுகாதாரம், வணிக வாய்ப்புகள் ஆகிய நான்கு விவகாரங்களில் முதன்மை கவனம் செலுத்தப்படுகிறது என்று கிள்ளானில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் கூறினார்.

பிரதமர் பதவியை பெரும் பொறுப்புடன் வகித்து வருகிறேன். 

அதனால் தெளிவான அரசாங்கக் கொள்கை நடைமுறையில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset