நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன உணர்வுகளை தூண்ட வேண்டாம்: இந்திய தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்து

கிள்ளான்: 

பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன உணர்வுகளை தூண்ட வேண்டாம் என்று இந்திய தலைவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

தங்களின் பிரச்சினைகளை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என அனைத்து இனங்களும் தற்போது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

ஆனால் மடானி கொள்கையின் அடிப்படையில் அனைவருக்கும் நியாயமான முறையில் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது அரசாங்கத்தின் இலக்காகும்.

இதனால் அதிருப்தியடையும் மக்கள் ஏன் எனது சொந்த இன மக்களே அரசாங்கத்தை கடுமையாக சாடுகின்றனர்.

அரசாங்கம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் நான் பதில் கூறுவது இல்லை.

ஏழ்மை என்பது நாடு முழுவதும் உள்ளது. ஆகையால் அந்த ஏழ்மையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

இதற்காக தான் அரசு கடுமையாக உழைக்கிறது என்று கிள்ளானில் நடைபெற்ற தேசிய பொங்கள் விழாவில் பிரதமர் கூறினார்.

இவ்விழாவில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் ஏரன் அகோ டகாங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைத்து இன மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது.

ஆனால் அதற்காக இன உணர்வுகளை தூண்டும் நடவடிக்கைகளை இந்திய தலைவர்கள் உட்பட யாரும் மேற்கொள்ள வேண்டாம்.

இதுவே எனது கோரிக்கை என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset