நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெரும் புள்ளிகளை விசாரிப்பது எளிதான காரியம் அல்ல: பிரதமர்

கிள்ளான்:

நாட்டில் உள்ள பெரும் புள்ளிகளை விசாரிப்பது என்பது எளிதான காரியம் அல்ல.

இருந்தாலும் அதை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அண்மைய காலமாக நாட்டில் உள்ள பெரும் புள்ளிகள் எம்ஏசிசியால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுபோன்ற விவகாரங்களால் அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாடுகள் எழுகிறது. பலர் கடுமையாக சாடுகின்றனர்.

உண்மையில் இந்த நபர்களை விசாரிப்பது எளிமையான காரியம் என்று நீங்கள் நினைத்தால் அப்படி ஏதும் இல்லை.

ஆனால் நாட்டின் அடையாளத்தையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.

அது மட்டும் தான் அரசாங்கத்தின் இலக்கு. அதனால் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது என்று கிள்ளானில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றிய பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பெரும் புள்ளிகள் மீதான விசாரணை என்று கூறிய பிரதமர், அது யார் என்ற பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset