நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூசத்தில் உல்லாசத் தன்மை வேண்டாம்; பக்தி பரவசம் போதும்: மலேசிய இந்து சங்கம்

கோலாலம்பூர்:

தைப்பூச விழாவில் உல்லாசத் தன்மை இல்லாமல் முழு பக்தி பரவசத்தோடு முருகனை வேண்டுவோம். இந்து ஆலய நிர்வாகத்தினரும் பக்த அன்பர்களும் தைப்பூச நன்னாளில் புனிதத்தையும் தனித்துவத்தையும் நிலைநாட்ட வேண்டும். 

நமது செயல்களே நம் சமயத்தின் பிரதிபலிப்பும் அடையாளமுமாகும் என்பதை நினைவில் கொள்வோம் என மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்க கணேசன் கேட்டுக் கொண்டார். 

தைப்பூசத் திருவிழா, அடிப்படையில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்குரிய சமய நிகழ்வாகும். அவ்வாறு, நேர்த்திக் கடனை நிறைவேற்ற காவடி - பால் குடம் ஏந்தும் பக்தர்கள், சைவ உணவுடன் கட்டுப்பாடாகவும் இருந்து விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 

விரதம் இருக்கும் காலக்கட்டத்தில், பண்பாட்டுக் குறைவான பொழுதுபோக்கு இசையைக் கேட்பது, நடனம் புரிவது போன்ற நடவடிக்கைகளை அடியோடு தவிர்க்க வேண்டும்.

அண்மைய காலமாக, தைப்பூச விழாவின் போது தண்ணீர்ப் பந்தல்களில் பக்திக்கு ஒவ்வாத திரைப்பட பாடல்களை ஒலிபரப்புவதையும் இளம் பக்தர்கள் உல்லாசத் தன்மையுடன் நடனமாடுவதையும் பரவலாகக் காணமுடிகிறது. இதனால், மற்ற பக்தர்களுக்கு சங்கடம் ஏற்படுவதுடன், இந்து சமயம் மற்றும் நம் வழிபாட்டு தலங்களின் தோற்றத்திற்கு பாதிப்பும் உண்டாகிறது.

எனவே, நம் சமயத்திற்கும் வழிபாட்டு முறைக்கும் பங்கம் ஏற்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட ஆலயங்கள் அடியோடு தவிர்க்க வேண்டியது அவசியம் என்பதை மலேசிய இந்து சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. 

பக்தர்கள் திருமுருக வணக்கப் பாடல்களைப் பாடவும் பக்தி நெறியோடு அவற்றுக்கு நடனமாடவும் ஆலய நிர்வாகங்கள் வழிகாட்ட வேண்டும். அதேவேளையில், ஆலயங்களில் தூய்மையைப் பேணுவதைப் பக்தர்கள் தங்களின் கடமையாக எண்ண வேண்டும். 

சமய பண்டிகைகள் அடிப்படையில் நமக்கு கட்டொழுங்கை கற்பிக்க அமையப்பெற்றவை தான். அடிப்படை தத்துவத்தை மறந்து செலுத்தப்படும் காணிக்கைகள் அர்த்தமற்றதாகி விடக்கூடாது என்பதை நினைவில் கொள்வோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset