நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்திய இசைக் குழுக்களின் 12 மணி நேரம் இடைவிடாத  இசைக் கொண்டாட்டம்: காயத்ரி தண்டபாணி

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய இசைக் குழுக்களின் 12 மணி நேரம் இடைவிடாத இசைக் கொண்டாட்டம் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாபெரும் கொண்டாட்டம் நிச்சயம் மக்களை மகிழ்விக்கும் என்று ஜெனிரா கிரியேட்டிவ் புராடக்சன் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி காயத்ரி தண்டபாணி நம்பிக்கை தெரிவித்தார்.

ஜெனிரா கிரியேட்டிவ் புராடக்சன் நிறுவனத்தின் தொடங்கப்பட்டு முதல் நிகழ்ச்சியாக மக்க ரெடியா எனும் நிகழ்வை நடத்தியது.

உள்ளூர் கலைஞர்களின் சங்கமமாக நடந்த இந்த நிகழ்வுக்கு மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நிகழ்வு வரும் ஜூன் 15ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 12 முதல் நள்ளிரவு 12 மணி வரை தலைநகரில் உள்ள தி பேஸ் கேஎல் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்த பிரமாண்ட இசை விழாவில் உள்ளூரைச் சேர்ந்த 20 இசைக் குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கிட்டத்தட்ட 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை இந்த விழாவில் கலந்து கொள்ளவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.

உணவு சந்தை, மினி மிருகக் காட்சி சாலை, ஹோலி கொண்டாட்டம், கார் மோட்டார் சைக்கிள் கண்காட்சி என பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கான டிக்கெட் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது

ஆகவே மலேசிய இசை ஆர்வலர்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு காயத்ரி கேட்டுக் கொண்டார்.

இவ்விழா குறித்த மேல்விவரங்களுக்கு 011-26277310 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset