நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழாயிலிருந்து கசியும் நீரினால் நாளொன்றுக்கு 300,000 வெள்ளிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படுகிறது 

பட்டர்வர்த்: 

சுங்கை பிராய் அடிவாரத்திலுள்ள குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் நாளொன்றுக்கு 323,000 வெள்ளி இழப்பு ஏற்படுவதாகப் பினாங்கு மாநில நீர் விநியோகக் கழகம் தெரிவித்துள்ளது. 

கசிவு ஏற்பட்டதில் இருந்து நாளொன்றுக்கு 154 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் விரையம் ஏற்படுவதாகப் பினாங்கு மாநில நீர் விநியோகக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

பட்டர்வொர்த்தில் இருந்து தீவின் ஒரு பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் இந்த குழாயில் முதலில் கடந்தாண்டு டிசம்பர் 18-ஆம் தேதி நீர் கசிவு ஏற்பட்ட நிலையில் இவ்வாண்டு ஜனவரி 10-ஆம் தேதி மீண்டும் நீர் கசிந்தது.

பின்னர்,  ஜனவரி 11-ஆம் தேதி குழாயைப் பழுதுபார்க்கும் போது மூன்றாவது முறையாக அக்குழாயிலிருந்து நீர் கசிந்தது.

குழாயை மேற்பரப்பில் பழுது பார்க்கும் நடவடிக்கை பிப்ரவரி 2-ஆம் தேதி முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

சுங்கை பிராயின் அடிப்பகுதியிலுள்ள தற்போதைய கசிவு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருடன் ஆற்று நீர் கலந்துவிடும் என்ற அச்சத்தையும் பத்மநாதன் தளர்த்தினார்.

ஒரு மணி நேரத்திற்கு 6,300 கன மீட்டர் வேகத்தில் குழாய் வழியாக தண்ணீர் செல்வதாகவும், அதில் சில கசிவுகள் ஏற்படுவதால், ஆற்று நீர் கசிவு அறைக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset