நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகனுக்கு எதிரான விசாரணை: எம்ஏசிசியை சாடிய துன் மகாதீர்

கோலாலம்பூர்:

மகன் மிர்சானுக்கு எதிரான எம்ஏசிசி விசாரணையை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கடுமையாக சாடியுள்ளார்.

பனாமா அறிக்கை, அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் விற்பனை, கொள்முதல் சம்பந்தப்பட்ட மிர்சானின் வணிக நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை எம்ஏசிசி துரிதமாக நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தொழிலதிபர் மிர்சான் மகாதீருக்கு அவரது சொத்துக்களை அறிவிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக  எம்ஏசிசி நேற்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆகஸ்ட் 2022 இல் அந்த விசாரணையைத் தொடங்கியதாக எம்ஏசிசி கூறியது.

இந்த நிலையில்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது மகனை நியாயமற்ற முறையில் விசாரித்து வருகிறது என்று துன் மகாதீர் அரசாங்கத்தை சாடியுள்ளார்.

பண்டோரா ஆவணங்களில் பெயரிடப்பட்ட பல அரசாங்க தரப்பினரை அரசு  விசாரிக்கவில்லை.

அதில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடியும் அடங்குவார்.

அதே வேளையில் பல தலைவர்கள் இந்த விசாரணையில் இருந்து விடுப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தில் இல்லாதபோது, ​​அதிகாரிகளின் அடக்குமுறையைப் பற்றி பேசுகிறார்கள். 

 ஆனால், ஆட்சியில் இருக்கும்போது, அவர்கள் தங்கள் அரசியல் எதிரிகளை இன்னும் மோசமாகச் செய்கிறார்கள்.

நீங்கள் அவர்களை  ஆதரித்தால்,  நண்பர்கள். இல்லையென்றால்  நீதிமன்ற நடவடிக்கைகள் கூட நிறுத்தப்படலாம் என்று துன் மகாதீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset