நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நிய தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ பரிசோதனையா?: வர்த்தக இயக்கங்கள் கடும் எதிர்ப்பு

கோலாலம்பூர்:

அந்நியத் தொழிலாளர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என ஃபோமேமா அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைக்கு நாட்டில் உள்ள வர்த்தக இயக்கங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் பிரெஸ்மா, பிரிமாஸ், எப்எம்பிஏ, மிம்கோய்ன் ஆகிய வர்த்தக இயக்கங்கள் கூட்டாக இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தின.

இதில் பேசிய பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி,

இதற்கு முன் அந்நியத் தொழிலாளர்களுக்கான ஃபோமேமாவின் மருத்துவ பரிசோதனைகள் ஓர் ஆண்டு செய்தால் அடுத்த ஆண்டு செய்ய வேண்டாம்.

ஆனால், தற்போது ஒவ்வோர் ஆண்டும் இந்த சோதனை நடத்த வேண்டும் என ஃபோமோமா கூறியுள்ளது.

அதே வேளையில் இந்த சோதனைக்கான கட்டணம் ஆண்களுக்கு 190 ரிங்கிட்டில் இருந்து 207 ரிங்கிட்டு உயர்த்தப்படவுள்ளது.

பெண்களுக்கான கட்டணம் 207 ரிங்கிட்டில் இருந்து 217 ரிங்கிட்டுக்கும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 முதல் 14 சதவீதம் கட்டண உயர்வு இருக்கவுள்ளது.

இதற்காக 2 மில்லியன் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் ஆண்டுக்கு 414 மில்லியன் ரிங்கிட்டை செலுத்த வேண்டும்.

இந்த புதிய நடைமுறையும் கட்டண உயர்வும் முதலாளிகளுக்கு தான் மிகப் பெரிய சுமையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

பெரும்பாலானோர் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆகிய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோய் உள்ளவர் ஃபோமேமாவின் மருத்துவ பரிசோதனையின் வாயிலாக தொடர்ந்து வேலை செய்வதற்கான தகுதியை இழக்கின்றனர்.

இவ்விரு நோய்களையும் கட்டுப்படுத்த முடியும். இது எச்ஐவி போன்று மோசமான நோய் அல்ல. அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, இவ்விரு நோய்களால் பாதிக்கப்படுபவர்களை 
வேலை செய்ய தடை விதிக்கும் நடவடிக்கை உடனடியாக  நீக்கப்பட வேண்டும் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.

அந்நியத் தொழிலாளர்கள் தொடர்பில் ஏதும் முடிவு செய்ய வேண்டும் வர்த்தக இயக்கங்களை அழைத்துப் பேச வேண்டும்.

அப்படி ஏதும் செய்யப்படாமல் கண்மூடித்தனமாக அவசரகதியில் முடிவுகள் எடுப்பது அநாகரீகம் என்று மிம்கோய்ன் தலைவர் டத்தோ ஹாஜி ஜமாருல் கான் கூறினார்.

பல சவால்களுக்கும் அறைகூவல்களுக்கும் மத்தியில் வணிகர்கள் வியாபாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தவொரு சூழ்நிலையில் இதுபோன்ற விவகாரங்கள் எங்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

ஆகவே, இந்த விவகாரத்தை ஃபோமேமா மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரிமாஸ் துணைத் தலைவர் கிருஷ்ணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset