நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹஜ் புனிதப் பயணக் கட்டண உயர்வு ஏற்புடையதே: தாபோங் ஹாஜி இயக்குநர்

கோலாலம்பூர்:

ஹஜ் புனிதப் பயணத்திற்கான கட்டண உயர்வு ஏற்புடையதே என்று தாபோங் ஹாஜி நிர்வாக இயக்குநர் சையட் ஹமாடா சையட் ஒத்மான் கூறினார்.

இந்த புனித யாத்திரைக்கான கட்டணம் 30,850 ரிங்கிட்டில் இருந்து 33,300 ரிங்கிட்டுக்கு அதிகரித்துள்ளது.

மலேசியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்பவர்களுக்கான கட்டணம் சற்று உயர்ந்துள்ளது.

பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் 12,356 ரிங்கிட்டை கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதே வேளையில் எம்40 பிரிவைச் சேர்ந்தவர்கள் 19,152 ரிங்கிட்டை செலுத்த வேண்டும்.

எஞ்சியக் கட்டணத்தை தாபோங் ஹாஜி செலுத்துகிறது.

கிட்டத்தட்ட 31,600 பேருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி விண்ணப்பக் கடிதம் வழங்கப்படும்.

விண்ணப்ப கடிதம் கிடைத்த 11 நாட்களில் அவர்கள் அதற்கான பதிலை அவர்கள கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset