நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஆர்எஸ்எம் பள்ளிக்கான நுழைவு தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது

பெட்டாலிங் ஜெயா: 

2024 ஆம் ஆண்டுக்கான எம்ஆர்எஸ்எம் பள்ளிக்கான யுகேகேஎம் எனப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் விண்ணப்பத்தை மேல்முறையீடு செய்ய முடியாது என்று மாரா தலைவர் அசிராஃப் வாஜ்டி டுசுகி கூறினார்.

மேல்முறையீடு செய்வது எம்ஆர்எஸ்எம்-இன் கொள்கைக்கு எதிரானது என்றார். 

எம்ஆர்எஸ்எம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்த நுழைவு தேர்வு முக்கிய அளவுகோலாக உள்ளது. 

நேற்றிரவு 8 மணி முதல் எம்ஆர்எஸ்எம் பள்ளிகளுக்கான விண்ணப்பத்தின் முடிவுகளைப் பதிவு செய்த மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். 

வாய்ப்பு வழங்கப்பட்ட மாணவர்கள் ஏழு நாட்களுக்குள் தங்களின் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். 

அவ்வாறு செய்ய தவறும் மாணவர்களின் வாய்ப்பு நிராகரிக்கப்படும் என்றார் அவர். 

இந்த விண்ணப்பம் குறித்து தகவல் கிடைக்காத மாணவர்கள் யுகேகேஎம் எனப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளதைக் குறிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பொதுவாக வாய்ப்புகள் வழக்கப்பட்ட 25-30% மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சலுகையை நிராகரிக்கின்றனர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset