நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிரேப் ரைடர்களுக்கான புதிய ஊதிய கட்டண விகிதம்; அரசாங்கம் விரைந்து தலையிடுமாறு  பி.பி.ஆர்.பி.எம் வலியுறுத்தல் 

கோலாலம்பூர்: 

கிரேப் ரைடர்களுக்கான புதிய ஊதிய கட்டண விகிதத்தை நேற்று கிரேப் மலேசியா நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த புதிய அறிவிப்பினால் பல கிரேப் ரைடர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 

புதிய ஊதிய கட்டண விதிதத்தை கிரேப் நிறுவனம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக அரசாங்கம் தலையீட  வேண்டும் என்றும் பி.பி.ஆர்.பி.எம் எனப்படும் மலேசிய ஒருமைப்பாட்டு விநியோக பங்காளிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

கிரேப் மலேசியாவின் போக்குவரத்து, உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் முழு இ- ஹெய்லிங் சேவைகளை உள்ளடக்கிய கொள்கைகள் அல்லது வழிகாட்டுதல்களை அரசாங்கம் உருவாக்கி வெளியிட வேண்டும் என்று அச்சங்கம் குறிப்பிட்டது. 

கிக் பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை வரையறுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த விவகாரம் இழுபறியாகவே இருக்கும் என்று அச்சங்கம் தங்களது கவலையை வெளிப்படுத்தியது. 

முன்னதாக, கிரேப் மலேசியா அறிமுகம் செய்த புதிய ஊதிய கட்டண விகிதத்தை எதிர்த்து கிரேப் ரைடர்கள் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கிரேப் மலேசியா தலைமையகத்தின் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று உலா வந்தது. 

இருப்பினும், இந்த போராட்டம் தொடர்பாக இதுவரை எந்தவொரு தகவல்களும் நிலவரங்களும் கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset