நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர்கள் இரண்டு நாட்கள் சீருடை, இரண்டு நாட்கள் விளையாட்டு உடைகள், ஒரு நாள் புறப்பாட நடவடிக்கை உடை அணிய அனுமதி : கல்வியமைச்சு அறிவிப்பு 

புத்ராஜெயா: 

2024/2025 பள்ளி அமர்வு தொடங்கவுள்ள நிலையில் நிலையில், மாணவர்கள் இரண்டு நாட்கள் சீருடை, இரண்டு நாட்கள் விளையாட்டு உடைகள், ஒரு நாள் புறப்பாட நடவடிக்கை உடை அணிய கல்வியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த மார்ச் மாதம் தொடங்கும் 2024/2025 பள்ளி அமர்வுலிருந்து இந்தப் புதிய முறை அமலுக்கு வருவதாக கல்வியமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

இது குறித்து அமைச்சகம் ஒர் அறிக்கையை வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த மார்ச் மாதம் தொடங்கும் 2024/2025 பள்ளி அமர்வுக்கு புதிய வழிகாட்டுதல்களைக் கல்வி அமைச்சகம் (KPM) முடிவு செய்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட வெப்பமான காலநிலையைத் தொடர்ந்துமாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் செயல்படுத்தும் குழுக்களுக்கு உடல்நலக் கோளாறுகளைத் தவிர்ப்பதற்காக கல்வியமைச்சு கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி  விளையாட்டு ஆடைகளை அணிவதற்கு தளர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset