நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உதவ மனிதவள அமைச்சின் பணிக் குழு களமிறங்கும்: அமைச்சர் ஸ்டீவன் சிம்

பத்துமலை: 

பத்துமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உதவ மனிதவள அமைச்சின் பணிக் குழு களமிறங்கும் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

நாட்டில் வாழும் இந்து மக்கள் வரும் ஜனவரி 25ஆம் தேதி தைப்பூச திருவிழாவைக் கொண்டாடவுள்ளனர்.

குறிப்பாக லட்சக்கணக்கான மக்கள் இந்த தைப்பூச விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பத்துமலைக்கு வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சின் 200 தொண்டூழியர்கள் இங்கு இருப்பார்கள்.

அதே வேளையில், பக்தர்கள் ஓய்வெடுக்க சிறப்பு கூடாரம் அமைக்கப்படவுள்ளது. கெசும் மடாணி என்ற சுலோகத்துடன் இந்த கூடாரம் அமைக்கப்படவுள்ளது.

இந்த கூடாரத்தில்  உள்ள வசதிகளை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே வேளையில் மனிதவள அமைச்சின் தகவல் மையமும் அமைக்கப்படும்.

மனிதவள அமைச்சின் கீழ் உள்ள பயிற்சிகள் உட்பட அனைத்து விவரங்களும் இந்த தகவல் மையத்தில் வழங்கப்படும்.

அதே வேளையில் மித்ராவுடன் இணைந்து பல திட்டங்கள் குறித்து விளக்கம் தரப்படவுள்ளது.

குறிப்பாக பெர்கேசோவின் இல்லத் தரசிகளுக்கான பாதுகாப்பு திட்டத்திற்கான பதிவும் அன்றைய தினம் நடைபெறும்.

மனிதவள அமைச்சின் இந்த சேவைகள் அனைத்தும் தைப்பூச தினத்தன்று காலை முதல் மாலை வரை இருக்கும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset