நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக ஏற்றுக் கொள்ள  ஐ.நா.வுக்கு சிறப்பு அஞ்சல் அட்டை அனுப்பினார் பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மலேசிய மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையிலும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான வன்முறைகள், கொடுமைகளை உடனடியாக நிறுத்தக் கோரி ஐ.நா.வுக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அஞ்சல் அட்டை அனுப்பினார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவை கையெழுத்திட்ட சிறப்பு அஞ்சல் அட்டையை ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதைப் பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சிறப்பு அஞ்சல் அட்டை ஐ.நா.வுக்கான மலேசியாவின் நிரந்தரப் பிரதிநிதி மூலம் சமர்ப்பிக்கப்படும். 

மலேசியர்களின் குரல் குட்டெரெஸிடமிருந்து தீவிர கவனத்தைப் பெறும் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

ஐ.நா பொதுச் செயலாளருக்குச் சிறப்பு அஞ்சல் அட்டைகளை அனுப்பும் பிரச்சாரத்தில் மலேசியர்களும் பங்கேற்கலாம் என்று அன்வார் தெரிவித்தார். 

நாளை முதல் அனைத்து தபால் நிலையங்களிலும் அல்லது Pos Malaysia Bhd இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் இந்த அஞ்சல் அட்டையைப் பொது மக்கள் வாங்கலாம் என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset