நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகார்களை ஏற்க மறுப்பது குற்றமாகும் : அலாவுதீன் அப்துல் மஜித்

கோலாலம்பூர் : 

புகார் அறிக்கையை ஏற்காதது தவறான நடவடிக்கையாகும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார். 

ஒரு காவல் நிலையத்தில் ஆடவர் ஒருவர் தம்மிடம் மிரட்டிப் பணம் பறித்த நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது கொடுத்த புகாரை ஏற்க மறுத்த காவல்துறை அதிகாரியின் செயல் தவறானது என்றும் அவர் கூறினார். 

கடந்த ஜனவரி 4-ஆம் தேதி 10,000 ரிங்கிட் பணத்தை மிரட்டி பணம் பறித்த நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புகார் கொடுக்க மக்கள் காவல் நிலையத்திற்கு வந்தால், அங்குப் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் அப்புகாரை ஏற்க வேண்டும். பின்னர் அந்த வழக்கு ஒரு குறிப்பிட்ட அதிகாரியால் கையாளப்படும் என்றார் அவர். 

இந்த வழக்கில், அறிக்கையை எடுக்க மறுத்த காவல்துறை அதிகாரியைத் தமது தரப்பு அடையாளம் கண்டுள்ளதாகவும் இது குறித்து விசாரிக்கப்படும் என்றார். 

இது போன்ற விஷயங்களைத் தங்கள் தரப்பு இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். 

கோலாலம்பூர் காவல் படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு கூறினார். 

மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன், காவல்துறையின் அறிக்கை சட்ட விதிகளின்படி வகைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜனவரி 4-ஆம் தேதி இங்குள்ள கெப்போங் கொம்ப்ளெக்ஸ் பாங்சாபுரிக்கு முன் நான்கு காவல்துறை அதிகாரி மிரட்டி பணம் பறித்த வழக்கு பற்றிய புகாரைப் பெற்றதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியது.

டிசம்பர் 23-ஆம் தேதி கெப்போங் அடுக்குமாடி வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நான்கு காவல்துறை அதிகாரிகள் RM10,000 கேட்டதாக உள்ளூர் நபர் ஒருவர் குற்றம் சாட்டினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset