நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தண்ணீர் கட்டணம் உயர்வு: பிப்ரவரி 1இல் அமலுக்கு வருகிறது

கோலாலம்பூர்:

தீபகற்ப மலேசியா, லாபுவானில் தண்ணீர் கட்டண உயர்வு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

தேசிய நீர் சேவை ஆணையம் ஸ்பான் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

தீபகற்ப மலேசியா,  லாபுவானில் உள்ள மாநிலங்களில் நீர்க் கட்டணங்களுக்கான கட்டமைப்பு தரப்படுத்தப்படும்.

அதே நேரத்தில் கட்டண விகிதங்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படும்.

இந்த  நீர் கட்டணங்களின் சரி செய்தல் ஒரு கன மீட்டருக்கு சராசரியாக 22 சென் அதிகரிப்பை உள்ளடக்கியது.

இருப்பினும், இந்த அதிகரிப்பு இன்னும் குறைவாகத்தான்  உள்ளது.

இதன் மூலம்  நீ சேவைகளை வழங்குவதற்கான உண்மையான செலவை ஈடுகட்ட முடியாது.

பொதுமக்களுக்கான மாதாந்திர நீர் கட்டணங்களின் அதிகரிப்பின் தாக்கத்தை குறைக்கப்படும்.

குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நீர் சேவை நிறுவனங்களுக்கு பி40 குடும்பங்களுக்கான தள்ளுபடிகள் உட்பட வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு இலக்கு உதவி வழங்குவது போன்ற தற்போதைய முயற்சிகளை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஸ்பான் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset