நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயல்படாத 500 கூட்டுறவுக் கழகங்களின்  பதிவு ரத்து: டத்தோ ரமணன்

கோலாலம்பூர்:

மலேசிய கூட்டுறவு ஆணையம் கடந்த ஆண்டில் செயல்படாமல் இருந்த 500 கூட்டுறவு கழகங்களின் பதிவை ரத்து செய்துள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் இதை உறுதிப்படுத்தினார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை 15,809 கூட்டுறவுக் கழகங்கள் மலேசிய கூட்டுறவு ஆணையத்தில் பதிவு பெற்றுள்ளன.

இக் கூட்டுறவுக் கழகங்களில் மொத்தம் 7.31 மில்லியன் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மொத்த பங்கு மூலதனம் அல்லது கட்டணம் 16.98 பில்லியன் ரிங்கிட் ஆகும். அதே வேளையில் அதன் மொத்த சொத்துக்கள் 159.61 பில்லியன் ரிங்கிட் ஆகும்.

May be an image of 13 people, headscarf, dais and text

இந்நிலையில் கடந்த ஆண்டு மலேசிய கூட்டுறவு ஆணையம் 500 கூட்டுறவு கழகங்களின் பதிவு ரத்து செய்தது.

முகவரி மாற்றப்பட்டதைத் தவிர தலைவர், பொதுச் செயலாளரைக் கண்டுபிடிப்பது கடினம், கண்டுபிடிக்க முடியாது என்ற அடிப்படையில் இப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் கூட்டுறவு நிர்வாகத்தின் தொடர்பு உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், கடந்த ஆண்டு புதியதாக 1001 கூட்டுறவுக் கழகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்தாண்டு 600 புதிய பதிவுகள் என்ற இலக்கு இருந்தது. ஆனால் அந்த இலக்கு கடந்துள்ளது. அதே வேளையில் 92 கூட்டுறவுக் கழகங்களில் இருந்த அனைத்து பிரச்சினைகள் சரி செய்யப்பட்டுள்ளன.

தலைநகரில் உள்ள மலேசிய கூட்டுறவு ஆணையத்திற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட டத்தோ ரமணன் மேற்கொண்டவாறு கூறினார்.

மலேசிய கூட்டுறவு ஆணையம் தலைமை இயக்குநர் ரூஸ்லி ஜாபர் துணையமைச்சரை வரவேற்றார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset