நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவாரம், திருமுறை சிறு பிள்ளைகள் மட்டும் பயில்வதற்கு அல்ல: டத்தோஸ்ரீ சரவணன்

பத்துமலை:

தேவாரம், திருமுறை சிறு பிள்ளைகள் மட்டும் பயில்வதற்கு அல்ல என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார்.

இஸ்லாத்தில் சிறு வயது முதல் அல் குர்ஆன் பயிலத் தொடங்கி விடுவார்கள். பெரியவர்களான பிறகும் அல் குர்ஆன் வசனங்களை ஓதித்தான் தொழுகையில் ஈடுபடுகின்றனர்.

நம் சமுதாயத்தில் அப்படி இல்லை. தேவாரம், திருமுறையை அனைவரும் படிப்பது இல்லை.

குறிப்பாக ஆலயத்திற்கு சென்றால் தேவாரம் திருமுறை பாட பலருக்கு தெரிவது இல்லை.

ஆலயமோ வீடோ நாம் தான் தேவாரம் பாடி இறைவனை வழிப்பட வேண்டும். 

தேவாரம் பாடி இறைவனிடமிருந்து நமக்கு கிடைக்காதது மற்றவர் மந்திரம் சொல்லி நமக்கு கிடைக்க போவதில்லை என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

தேவாரம், திருமுறை கற்பதற்கு வயது வரம்பு இல்லை. 

பிள்ளைகள் மட்டுமின்றி பெரியவர்களும் தேவாரம், திறைமுறையை வகுப்புகளில் இணைந்து அவற்றை கற்கலாம் என்று அவர் கூறினார்.

பத்துமலை திருத்தலத்தில் டிஎஸ்கே குழுவினர் நடத்திய தேவார வகுப்பின் ஓராண்டு நிறைவு விழாவில் சிறப்பு நடைபெற்றது.

ஓராண்டுக்கு முன் தொடர்ந்த இந்த வகுப்பு தொடருமா என்ற கேள்விகள் எழுந்தது.

ஆனால் ஓராண்டாக இந்த வகுப்பு வெற்றிகரமாக நடத்தி டிஎஸ்கே குழுவும் அதன் தலைவர் டத்தோ சிவக்குமாரும் சாதனைப் படைத்துள்ளனர்.

இவ்வாண்டு 63 நாயன்மார்களின் சிறப்புகளை மக்களிடையே கொண்டு சேர்க்க 63 இடங்களில் சிறப்பு விழாக்களை நடத்த டிஎஸ்கே குழு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றி பெற என வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

இவ்விழாவில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset