நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தை கவிழ்க்க மாமன்னருக்கு கையூட்டு போலீஸ் விசாரணையை தொடங்கியது: ஐஜிபி

கோலாலம்பூர்:

அரசாங்கத்தை கவிழ்க்க மாமன்னருக்கு தேசியக் கூட்டணி கையூட்டு வழங்க முயற்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் போலீஸ் விசாரணை அறிக்கையை திறந்துள்ளது என்று தேசிய போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக தேசியக் கூட்டணி தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மாமன்னருக்கு 1 பில்லியன் ரிங்கிட் கையூட்டு வழங்க முயற்சித்ததாக சமூக வலைத் தளங்களில் வைரலானது.

இக்குற்றச்சாட்டை மறுத்து ஹம்சாவின் உதவியாளர் இக்வான் பாட்லி போலீஸ் புகார் செய்தார்.

அதே வேளையில் இந்த விவகாரம் தொடர்பில் போலீசாருக்கு நான்கு புகார் கிடைத்துள்ளது.

இப்புகார்களின் அடிப்படையில் போலீஸ் விசாரணை அறிக்கையை திறந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset