நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியையும் ஒற்றுமை அரசாங்கத்தையும் மைபிபிபி கட்சி ஆதரிக்கும்: டத்தோ லோகபாலா

கோலாலம்பூர்:

தேசிய முன்னணியையும் ஒற்றுமை அரசாங்கத்தையும் மைபிபிபி கட்சி தொடர்ந்து ஆதரிக்கும்.

அக்கட்சியின் இடைக்கால தலைவர் டத்தோ லோகபாலா இதனை தெரிவித்தார்.

மைபிபிபி கட்சியில் நிலவிய பிரச்சினைகள் அனைத்தும் மக்கள் அறிவார்கள்.

அப்பிரச்சினைக்கு எல்லாம் தீர்வு காணப்பட்ட நிலையில் கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

எனது தலைமையில் இரண்டு மத்திய செயலவைக் கூட்டங்கள் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது.

கட்சியின் பேராளர் மாநாடு விரைவில் நடத்தப்படவுள்ளது. கட்சியை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் கல்வி விவகாரத்தில் கோட்டா முறை இருக்கக் கூடாது என மைபிபிபி கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளது.

இவை எல்லாம் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று டத்தோ லோகபாலா கூறினார்.

ஆரம்பக் காலத்தில் இருந்து தேசிய முன்னணி உறுப்புக் கட்சியாக மைபிபிபி உள்ளது.

இடையில் ஒருவரால் பிரச்சினை ஏற்பட்டது. இருந்தாலும் கட்சி தேசிய முன்னணிக்கு தான் ஆதரவை வழங்கி வருகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

விரைவில் தேசிய முன்னணி கூட்டத்தில் மைபிபிபி கலந்து கொள்ளும்.

ஆகவே இப்போதைக்கு மைபிபிபி கட்சி தேசிய முன்னணியையும் ஒற்றுமை அரசாங்கத்தையும் ஆதரிக்கும்.

அதில் ஏதும் பிரச்சினை என்றால் கட்சி அடுத்தக்கட்ட முடிவை எடுக்கும் என்று அவர் கூறினார்.

இதனிடையே டத்தோ டல்ஜிட் தலைமையில் 20 கிளைகளைச் சேர்ந்தவர்கள் இன்று மைபிபிபி கட்சியில் இணைனந்தனே என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset