நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்பிகே விவகாரத்தில் அந்தோனி லோக் தலையிட வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்

கிள்ளான்:

தென் போர்ட் கிள்ளான் துறைமுகத்தில் வசதிகளை மேம்படுத்துவது, நடைமுறைகள்  உள்ளிட்ட பல சிக்கல்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் தலையிட வேண்டும் என்று மேரிடைம் நெட்வோர்க் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் கூறினார்.

துறைமுகத்தில் உள்ள வசதிகள் பிரச்சினைகளை தீர்க்க, தொழில்துறைக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் அனைத்து தொழில் துறையினருடன் அமைச்சர்  பேச்சுவார்த்தை நடத்த நேரம் வந்து விட்டது.

போர்ட் கிள்ளானில் உள்ள நடைமுறைகள், வசதிகள் இல்லாததால் துறைமுகத்தில் அதிகமான  கப்பல்கள் நிறுத்த முடியவில்லை.

இதன் வாயிலாக  நாட்டுக்கு  ஒரு மாதத்திற்கு  300,000 ரிங்கிட் வரை  இழப்பு ஏற்படுகிறது.

இதனால் கப்பல் நிறுவனங்கள் வேறொரு துறைமுகங்களை தேர்வு செய்கின்றன. இதுவும் நாட்டிகு மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்துகிறது.

இவ்விவகாரம் குறித்து எல்பிகே எனப்படும் கிள்ளான் துறைமுக ஆணையத்திடம் பல முறை புகார் செய்யப்பட்டது.

ஆனால் அதற்கு இதுநாள் வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

நான் பேசினால் அல்லது புகார் செய்தால் அல்லது முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளை வழங்க முயற்சித்தால், எங்கள் நிறுவனம் துறைமுக பாதுகாப்பு விதிமுறைகளை மறுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படும்.

முன்னதாக, நான் எல்பிகேயிடம் தற்போதுள்ள நடைமுறைகளை மேம்படுத்துமாறு கேட்டுக் கொண்டேன்.

குறிப்பாக கப்பல்துறைக்கு அனுமதிக்கப்படும் கப்பல்களின் அளவுகள் அதிகரிக்கப்பட வேண்டும். 

கப்பல் துறை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என நான் கேட்டுக் கொண்டேன்.

ஆனால் எல்பிகேவிடம் இருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.

ஆகவே இந்த விவகாரத்தில் போக்குவரத்துறை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டத்தோஸ்ரீ ஜெயந்திரன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset