நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீண்டும் பள்ளி சீருடை அணிவது குறித்து அனைவரின் கருத்துகளையும் கல்வியமைச்சு சேகரிக்கும்: ஃபாட்லினா

புத்ராஜெயா:

மீண்டும் பள்ளி சீருடை அணிவது குறித்து அனைவரின் கருத்துகளையும் கல்வியமைச்சு சேகரிக்கும்.

கல்வியமைச்சர் ஃபாட்லினா சிடேக் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

கடந்தாண்டு மே மாதம் வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள், அமலாக்கக் குழுவைச் சேர்ந்தவர்கள்  விளையாட்டு உடைகள் அல்லது சட்டைகளை அணிய கல்வியமைச்சு அனுமதித்தது, 

மேலும் இந்த சிறப்பு அனுமதியானது உடல்நலச் சிக்கல்களைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது 2024ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா என்ற கேள்விக்கு கல்வியமைச்சர் கூறியதாவது,

இந்த விவகாரத்தில் கல்வியமைச்சு எடுத்தவுடனே முடிவுகளை எடுக்காது.

குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பில் அனைவரின் கருத்துகளும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அதன் பின்பே பள்ளி சீருடைகள் அணிவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset