நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாதீர்: டத்தோ ரமணன் எச்சரிக்கை

கோலாலம்பூர்: 

மித்ராவை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் எச்சரித்துள்ளார்.

கடந்த காலங்களில் மித்ரா பிரதமர் துறையின் கீழ் இருந்தது. அப்போது சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. அதற்கு தலைவராகவும் நான் பதவியேற்றேன்.

இந்நிதியை பயன்படுத்துவது முதல் கணக்கு காட்டுவது வரையிலாவரையிலான அடிப்படை வழிமுறைகளை நாங்கள் செய்துள்ளோம்.

தற்போது மித்ரா தேசிய ஒருமைப்பட்டு அமைச்சின் கீழ் மாற்றப்பட்டு உள்ளது. நாங்கள் அமைத்த வழிமுறைகளை பயன்படுத்துதா இல்லையா என்பது அந்த அமைச்சின் முடிவாகும்.

அதே வேளையில் மித்ராவின் நிலைப்பாட்டை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சர் பாஹ்மி கூறியுள்ளார்.

என்னை பொருத்தவரையில் மித்ரா தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்கு நான் செல்வது இல்லை. அங்கு என்ன பேசப்பட்டது என்றும் எனக்கு தெரியாது.

பிரதமர் தான் அது குறித்து அறிவிப்புகளை செய்ய வேண்டும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

மித்ரா அமைச்சுக்கு மாற்றப்பட்டது. அதற்கு ஒதுக்கப்படும் நிதி, அடுத்து தலைமையேற்கப்போவது யார் என்ற விவகாரங்கள் தொடர்ந்து சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.

என்னை பொருத்த வரையில் மித்ராவை வைத்து யாரும் அரசியல் நடத்த வேண்டாம். அது அரசியல் ஆயுதம் இல்லை.

மித்ரா எங்கிருந்தாலும் பரவாவில்லை. அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறதா, அந்நிதி எப்படி சமுதாயத்தை சென்றடைகிறது என்பதில் தான் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே இதுபோன்ற விவகாரங்களை வைத்து அரசியல் நடுத்தாமல் சமுதாயத்திற்கு ஏதாவது உருப்படியான விஷசங்களை செய்யுங்கள் என்று டத்தோ ரமணன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset