நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சனுசி மாட் நோர் வாக்குமூலம் வழங்க எம்.ஏ.சி.சி தலைமையகத்திற்கு வந்தடைந்தார்

கோலாலம்பூர்: 

கெடா மாநில காற்பந்து சங்கத்தை உட்படுத்திய 6 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான ஊழல் தொடர்பாக கெடா மாநில மந்திரி பெசார் சனுசி மாட் நோர் வாக்குமூலம் அளிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்தடைந்தார். 

கெடா மாநில காற்பந்து சங்கத்தின் தலைவருமான சனூசி, காலை மணி 8.30க்கு எம்.ஏ.சி.சி அலுவலகத்தை வந்தடைந்ததாக உத்துசான் மலேசிய செய்தி வெளியிட்டுள்ளது. 

வாக்குமூலம் அளிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.  கடந்த ஜனவரி 9ஆம் தேதி, கெடா மாநில மந்திரி பெசார் ஊழல் நடவடிக்கைக்காக விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சம்பந்தப்பட்ட குத்தகையாளர்களுக்கு முறையான நிதியை வழங்கப்படாமல் இருந்ததை அடுத்து குத்தகையாளர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் எம்.ஏ.சி.சி சனூசி ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். 

2020ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த ஊழல் காரணமாக முதலில் கெடா மாநில காற்பந்து சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை எம்.ஏ.சி.சி கைது செய்தனர். எம்.ஏ.சி.சியின் இந்த கைது தொடர்பில் சனூசி நோர் கடுமையான சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset