நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போதைப்பொருள் கும்பலுடன் எக்குவடோர் அரசாங்கம் போராடி வருகிறது: அதிபர் டேனியல் நோபொவ தகவல் 

எக்குவடோர்: 

எக்குவடோரில் போதைப்பொருள் குடும்பலுக்கும் ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 10 பேர் மரணமடைந்தனர். அதில் இரு போலீஸ் அதிகாரியாவார்கள் என்று எக்குவடோர் நாட்டின் அதிபர் டேனியல் நோபொவ கூறினார். 

எக்குவடோர் நாடு தற்போது மிகப்பெரிய போராட்டத்தைச் சந்தித்து வருகிறது. போதைப்பொருள் கும்பலைத் துடைத்தொழிப்பதே எங்களின் தலையாய பணியாகும் என்று வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அதிபர் டேனியல் நோபொவ தெரிவித்தார். 

போதைப்பொருள் கும்பல் ஒன்று எக்குவடோர் நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதாக நேரலை நிகழ்ச்சி ஒன்றில் ஆயுதமேந்தி அவர்கள் அறிவித்தனர். 

இந்த சம்பவம் உலக நாடுகள் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேரலையில் துப்பாக்கிகளுடன் நுழைந்த கும்பலை போலீஸ் சிறப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர். 

அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவிக்கும் காணொலிகளும் சமூக ஊடகங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset