செய்திகள் மலேசியா
தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரை சுத்தம் செய்யப்பட்டது: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரை சுத்தம் செய்யப்பட்டது என்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
உலகமெங்கும் தைப்பூச விழா வரும் ஜனவரி 25ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
மலேசியாவில் பத்துமலை திருத்தலத்தில் இந்த தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படும்.
வெள்ளி ரத ஊர்வலத்துடன் தொடங்கும் இவ்விழா பல நாட்களுக்கு நீடிக்கும்.
தை மாதம் தொடக்கத்தில் இருந்து பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள்.
இதனால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்கான தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
குறிப்பாக பத்துமலை ஆற்றங்கரை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் இந்த ஆற்றங்கரையை முழுமையாக பயன்படுத்தலாம்.
குறிப்பாக பக்தர்கள் ஆற்றங்கரையிலும் ஆலய வளாகத்திலும் சுத்தத்தை பேண வேண்டும் என டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 8:12 pm
மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மதிக்க வேண்டும்: அந்தோனி லோக்
April 27, 2026, 8:11 pm
இறுதித் தெளிவு கிடைக்கும் வரை மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மாட்டேன்: அமினுடின்
April 27, 2026, 5:04 pm
பெர்மாஸ் பகுதியில் உள்ள இந்திய சமூக தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்பு
April 27, 2026, 4:56 pm
மே தின விடுமுறை - உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்படலாம்
April 27, 2026, 4:23 pm
சைட் சாடிக் விடுதலையாவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா?: ஜூன் 30ஆம் தேதி தீர்ப்பு
April 27, 2026, 4:22 pm
