நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இன்ஸ்டாகிரம், முகநூல் தளங்களில் பதின்ம வயதினருக்கான உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் : மெட்டா தகவல் 

வாஷிங்டன்: 

இன்ஸ்டாகிராம், முகநூல் தளங்களில் பதின்ம வயதினருக்கான உள்ளடக்கக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதன் மூலம் இளைஞர்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்க இயலும். 

சில உள்ளடக்கங்கள் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. 

இது குறித்து நிறைய புகார்கள் கிடைத்த நிலையில் இந்த மாற்றங்கள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளன.

இப்போது நண்பர்கள் அல்லது அவர்கள் பின்தொடர்பவர்களிடமிருந்து வந்தாலும் கூட, இன்ஸ்டாகிராம், முகநூல் முழுவதும் சில வகையான உள்ளடக்கங்களைப் பார்ப்பதை இளம் வயதினரைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த வகை உள்ளடக்கத்தில் தற்கொலை, சுய-தீங்கு பற்றி விவாதிக்கும் உள்ளடக்கம், அத்துடன் நிர்வாணம் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களின் குறிப்புகள் ஆகியவை அடங்கும். 

இன்ஸ்டாகிராமில் தடைசெய்யப்பட்ட பொருட்களில் புகையிலை பொருட்கள், ஆயுதங்கள், மது, கருத்தடை,ஒப்பனை நடைமுறைகள், உடல் எடை குறைப்பு வழிப்புகள் ஆகியவை அடங்கும் என்று அதன் இணையதளம் தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset